பிரபல McDonalds உணவகத்தில் குளிர்பானத்தில் இறந்து கிடந்த பல்லி - வைரலாகும் வீடியோ - அதிகாரிகள் அதிரடி

By Nandhini May 26, 2022 05:43 AM GMT
Report

அகமதாபாதில் உள்ள McDonalds உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது, அங்கு உணவு வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குளிர்பானம் கேட்டிருக்கிறார். அப்போது குளிர்பானம் கொண்டு வரப்பட்டது. அந்த குளிர்பானத்தை குடிக்க முற்பட்டபோது,  அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது.

இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கும், அதிகாரிக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து உணவகத்தில் விசாரணை நடத்தினர். மேலும், அந்த உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.