ஐபிஎல் பைனலில் ரஸல் ஏன் ஆடவில்லை தெரியுமா? - இதுதான் காரணம்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரூ ரஸல் விளையாடாததற்கான காரணத்தை பயிற்சியாளர் மெக்கல்லம் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 14வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணமாக கூறப்படுகிறது. அதே போல் முக்கிய வீரரான ஆண்ட்ரூ ரஸலுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் ஆண்ட்ரூ ரஸல் விளையாடாததற்கான காரணத்தை பயிற்சியாளர் மெக்கல்லம் வெளியிட்டுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ரஸலுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை. அவரும் காயத்தில் இருந்து மீண்டு வர மிக கடுமையாக முயற்சித்து வந்தார்.
இறுதி போட்டியில் அவர் காயத்துடன் விளையாடுவது தேவையற்ற ரிஸ்க் என்று கருதியே அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதே போல் இறுதி போட்டி வரை நாங்கள் தகுதி பெறுவதற்கு உதவியாக இருந்த வீரர்களை வைத்தே இறுதி போட்டியையும் சந்திப்பது சிறந்தது என நாங்கள் கருதினோம் என மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.