“வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் 90% மாணவர்கள் இந்தியாவில் தேர்ச்சி பெறுவதில்லை” - மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்

pralhadjoshimbbsstudents 90%failsentranceindia medicaldegreeabroad
By Swetha Subash Mar 02, 2022 06:14 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

உக்ரைன் மீது ரஷ்யா 7வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நாடும் பதிலடி கொடுத்து வருகிறது.உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்யா நாட்டு படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற புரோஜக்ட் மூலம் முழு வீச்சில் மீட்புப்பணியில் இறங்கியுள்ளது.

“வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் 90% மாணவர்கள் இந்தியாவில் தேர்ச்சி பெறுவதில்லை” - மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல் | Mbbs Students Abroad Fails To Clear Exam In India

அதற்கான கணக்கெடுப்பின்போது சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்து வருவது தெரிய வந்துள்ளது.

இதில் பெரும்பான்மையான மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டை தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம், நீட் தேர்வு போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய மாணவர்கள் உக்ரைன் சென்று மருத்துவ படிக்கிறார்கள்.

ஏனெனில், உக்ரைனில் குறைவான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

[ND06P

இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் தகுதி பெற தவறுகிறார்கள் என மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் பேசுகையில்,

‘‘வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற தவறி விடுகிறார்கள்.

மேலும், மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏன் வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து விவாதம் நடத்த இது சரியான நேரம் அல்ல’’ என தெரிவித்தார்.