செமஸ்டரில் பாஸ் ஆக மாணவர் செய்த சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கல்லூரி நிர்வாகம்

madhyapradesh medicalexamcheating
By Petchi Avudaiappan Feb 23, 2022 10:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மத்தியப்பிரதேச மருத்துவக்கல்லூரியில் நடந்த செமஸ்டர் தேர்வில் காப்பி அடிக்க மாணவர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. சரியாக தேர்வு முடியவிருந்த அரை மணிநேரத்துக்கு முன்பாக திடீரென பறக்கும் படையினர் அங்கு வந்து சோதனை நடத்தினர்.

அப்போது அதிகாரி ஒருவர் மாணவர் ஒருவரின் அருகில் சென்ற போது அவர் தேர்வு எழுதுவதை நிறுத்தியுள்ளார். இதனை கண்டு சந்தேகமடைந்த அதிகாரி மாணவரை சோதனை செய்ய அவரது பேண்ட் பையில் சிறிய அளவிலான செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனை சோதனை செய்ததில் அதில் ப்ளூடூத் இணைப்பு ஆன் ஆகி இருந்தது. 

ஆனால் எவ்வளவு தேடியும் ப்ளூடூத் இல்லை தொடர்ந்து அந்த மாணவரை பறக்கும் படையினர் தனியாக அழைத்து சென்று விசாரித்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது ப்ளூடூத்தை காதுக்குள் அறுவை சிகிச்சை பொருத்தியிருப்பதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார். அதனை கல்லூரியில் இருந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக வெளியே எடுத்தனர்.

கடந்த 11 ஆண்டுகளாக இறுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்ததாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவரை தேர்வில் தகுதிநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம் அவரை போலீசில் ஒப்படைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.