இவர் வேற மாதிரி பையன்ப்பா... 201 கோல் அடித்து 24 வயதில் மாபெரும் சாதனை படைத்த எம்பாப்பே...!

Football Viral Video Kylian Mbappé
By Nandhini Mar 05, 2023 02:01 PM GMT
Report

பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி, எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார்.

24 வயதில் சாதனை படைத்த எம்பாப்பே

பிரான்சின் லீக் 1 கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்கள் நிரம்பிய, பலம் வாய்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி எஃப்.சி.நான்ட் அணியுடன் நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியின் 79வது நிமிடத்தில் எஃப்.சி.நான்ட் அணி வீரர் இக்னேஷியஸ் கனகோ அடித்த பந்து சில அங்குல இடைவெளியில் கோல் கம்பத்திற்கு வெளியே சென்றுவிட்டது.

கடைசி நிமிடங்களில் வீரர்களை மாற்றி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், 92வது நிமிடத்தில் எம்பாப்பே கோலடித்து மாஸ் காட்டினார். பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரான லீக் ஒன்றில் 2017ம் ஆண்டு முதல் விளையாடி வரும் எம்பாப்பேவுக்கு இது 201வது கோலாக அமைந்துள்ளது.

இதனால், PSG க்ளப் அணிக்காக அதிக கோல் (201) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து எம்பாப்பே சாதனை படைத்துள்ளார். மேலும், எடிசன் கவானியின் சாதனையை முறியடித்து அவரை பின்னுக்குத்தள்ளி எம்பாப்பே முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.