அவர் கிட்ட மட்டும் பயம் தான் - மேயர் பிரியா ஓபன் டாக்
சென்னை மேயர் பிரியா ராஜன் ஐபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு அரங்கு திறப்பு விழா
ஐபிசி தமிழின் புதிய படப்பிடிப்பு அரங்கு (ஸ்டூடியோ) திறப்பு விழா சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஐபிசி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் புதிய படப்பிடிப்பு அரங்கை (ஸ்டூடியோ) திறந்து வைத்தார்.
பின்னர் ஐபிசி தமிழ் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு புன்னகையுடன் தான் சந்தித்து வரும் சவால்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
குடும்பம் தான் பெரிய சப்போர்ட்
அதில், தனக்கு தேவையான ஆடைகளை கணவர் தேர்ந்தெடுப்பார் என்றும் பல்வேறு சூழலில் என்னுடன் இருப்பது என்னுடைய கணவர் தான்.
தான் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியே செல்வதாக இருந்தால் இரவு நேரத்தில் தான் உணவகம் உள்ளிட்டவற்றிக்கு செல்வோம் என்றார்.
மேலும் பேசிய அவர், முதலமைச்சர் இளைஞர்களை ஆதரிப்பதாகவும், அவர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரசியல் சார்ந்த அறிவுரைகளை தனக்கு அமைச்சர் சேகர் பாபு கொடுப்பார் என்றும் தெரிவித்தார். தன்னை எல்லோரும் புதியவர் இவரை மேயர் பதிவிக்கு கொண்டு வருவது குறித்து தெரிவித்த போது முதலமைச்சர் இல்லை இந்த பொண்ணு பண்ணுவா.. என்று தன் மீது நம்பிக்கை வைத்து மேயர் பதவி வழங்கியதாக தெரிவித்தார். எனவே முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு மட்டுமே பயம்
அதனை தொடர்ந்து, தனது தந்தைக்கு மட்டுமே பயப்படுவேன் என்று பிரியா ராஜன் கூறினார். தான் சென்னை நகராட்சிக்கு மேயரானாலும், தனது தந்தைக்கு எப்போதும் மகள் தான் என்பதால் அவரிடம் மட்டுமே பயப்படுவேன் என தெரிவித்துள்ளார்.
முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்...