கோவை மேயர் இவர் தான்..!திமுக மாவட்ட செயலாளர் மகளுக்கு வந்த வாழ்வு

MayorofCoimbatore DMKMember DMKCouncilors
By Thahir Mar 02, 2022 10:13 AM GMT
Report

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.

கோவையில் இன்று மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்ற சூழலில், 97வது வார்டு உறுப்பினரும் திமுக பொறுப்பாளரின் மகளுமான நிவேதா சேனாதிபதி தாமதமாக நிகழ்ச்சிக்கு வந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா இன்று மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா புதிய மாமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் காலை 1O மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டதும் அனைத்து உறுப்பினர்களும் விக்டோரியா ஹாலில் ஆஜராகினர்.

இதில் 97வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட திமுக.,வை சேர்ந்த நிவேதா சேனாதிபதி மட்டும் வரவில்லை.

ஏற்கனவே நிவேதா கோவை மேயர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனிடையே 2O உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்யும் வரை நிவேதா நிகழ்ச்சி அரங்கத்திற்கு வரவில்லை. பின்னர் சாவகாசமாக நிகழ்ச்சிக்கு வந்தார்.

தொடர்ந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அதிகாரிகள் நிவேதாவை அமர வைத்தனர். சீனியர்களை கண்டுகொள்ளாமல் தனது இருக்கையில் அமர்ந்திருந்த நிவேதவை தேடித் தேடி வந்து புன்னகையுடன் பேச தொடங்கினர் திமுக சீனியர்கள்.

மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் போதே இப்படி 'டஃப்' கொடுக்கிறாரே என்ற பேச்சுகளை மாமன்ற அலுவலகத்தில் கேட்க முடிந்தது.