அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விச்சுற்றுலா - கொடியசைத்து அனுப்பி வைத்தார் மேயர் பிரியா!

Tamil nadu Chennai Priya Rajan
By Jiyath Aug 19, 2023 07:57 AM GMT
Report

கல்விச் சுற்றுலா செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார் மேயர் பிரியா.

கல்வி சுற்றுலா

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டும் வகையில் 'கல்வி சுற்றுலா' சென்று வர நடவடிக்கை எடுப்பதாக 2023-2024ம் ஆண்டிற்கான கல்வித்துறையின் நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவித்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விச்சுற்றுலா - கொடியசைத்து அனுப்பி வைத்தார் மேயர் பிரியா! | Mayor Flagged Off Educational Tour Gvt Teachers

அந்த வகையில் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த 408 ஆசிரியர்களில் முதற்கட்டமாக 136 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து ரிப்பன் கட்டிய வளாகத்தில் வைத்து மேயர் பிரியா அவர்களிடம் உரையாடினார். இதைத் தொடர்ந்து 4 பஸ்களில், 2 நாள் சுற்று பயணமாக கொடைக்கானல் மற்றும் ஏற்காடு செல்ல கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர் த.விசுவநாதன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேயர் பிரியா பேட்டி

இதுகுறித்து மேயர் பிரியா நிருபர்களிடம் பேசியதாவது 'சென்னை மாநகராட்சியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 37 பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்க முதல் முறையாக இந்த சுற்றுலா திட்டம் கொண்டுவரப்பட்டது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விச்சுற்றுலா - கொடியசைத்து அனுப்பி வைத்தார் மேயர் பிரியா! | Mayor Flagged Off Educational Tour Gvt Teachers

இது தவிர மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறோம். 28 பள்ளிகள் சிட்டிஸ் நிதியிலிருந்து உட்கட்டமைப்பு மாற்றம் போன்ற பல்வேறு பணிகள் முடிவடைந்து பயனுக்கு வந்துள்ளது.

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 23 பள்ளிகள் மேம்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் கழிப்பறைகள் சீர்செய்யப்பட்டு வருகிறது என்று பெயர் பிரியா பேசியுள்ளார்.