கேரள எம்.எல்.ஏ.வை திருமணம் செய்யும் இளம் வயது மேயர் - குவியும் வாழ்த்து
இந்தியாவின் இளம் வயது பெண் மேயர் கேரள எம்.எல்.ஏ.வை திருமணம் செய்யவுள்ள தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2020 ஆண்டு கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற நிலையில் திருவனந்தபுரத்தின் மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் பொறுப்பேற்றார்.
இதன்மூலம் இந்தியாவில் மிகக்குறைந்த வயதில் மேயர் ஆனவர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றார். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஆர்யா ராஜேந்திரன் தற்போது தமிழக உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆர்யா கேரள மாநிலம் பாலுச்சேரி தொகுதியில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வாக உள்ள சச்சின் தேவ் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். சச்சின் தான் கேரள சட்டப்பேரவையின் இளம் வயது எம்.எல்.ஏ. ஆவார்.
தற்போது இந்திய மாணவர் சங்கத்தில் மாநில செயலாளராக உள்ள சச்சின் தேவ் எஸ்.எப்.ஐ. அமைப்பின் தேசிய இணைச் செயலாளராகவும் உள்ளார்.