16 குழந்தைகள் - 16 வயது சிறுமியை 7வது திருமணம் செய்த 65 வயது மேயர்!
65 வயதுடைய நபர் 16 வயது இளம்பெண்ணை 7வது திருமணம் செய்துள்ளார்.
7வது திருமணம்
பிரேசிலின் அரவுகாரியா நகராட்சியின் மேயர் ஹிசாம் ஹூசைன் தெஹைனி (65). இவருக்கு 6 திருமணம் நடைபெற்றுள்ளது. அதில், 16 குழந்தைகள் உள்ளனர். 1980ல் முதல் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், 16 வயதுடைய காவான் ரோட் காமர்கோ என்ற சிறுமியை 7வது திருமணம் செய்து கொண்டார். காமர்கோ பள்ளி மாணவி. கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் அரவுகாரியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
மேயர் பதவி விலகல்
திருமணத்திற்கு பின் ஹிசாம் அவரது மேயர் பதவியில் இருந்து விலகியுள்ளார். மேலும், திருமணத்திற்கு மறுநாள் சிறுமியின் தாய் மரிலீன் ரோட் அரவுகாரியா நகராட்சியின் கலாச்சார செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதற்கிடையில், மேயர் கடந்த 2000ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின் கடத்தல் கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லாதவர் என்று விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan