பலமுறை வந்த நெஞ்சுவலி.. - கண்டுக்காத மயில்சாமி... - வெளியான அதிர்ச்சி தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!
நகைச்சுவை நடிகர்
மயில்சாமி தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நகைச்சுவை வேடங்கள் மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
ஒரு மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார் மயில்சாமி. வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் நுழைந்து தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார். ஆனால் வடிவேல் , விவேக் அளவிற்கு ஒரு முன்னனி நகைச்சுவை நடிகராக அவரால் ஜொலிக்க முடியவில்லை.
நடிகர் மயில்சாமி உயிரிழப்பு
சென்னையையடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றார் மயில்சாமி. சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார். கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலைக்கு இல்லம் திரும்பிய மயில்சாமி, காலை 4 மணிக்கு இட்லி சாப்பிட்ட பிறகு, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உடல் தகனம்
இதனையடுத்து, மயில்சாமியின் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலகினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மயில்சாமி இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் பாடல்கள், மேளதாளத்துடன் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வடபழனி ஏவிஎம் மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

நெஞ்சுவலியை கண்டுக்காத மயில்சாமி
நடிகர் மயில்சாமி மாரடைப்பில்தான் உயிரிழந்துள்ளார். இதற்கு முன்பே அவருக்கு பலமுறை நெஞ்சுவலி வந்துள்ளது. ஆனால், அதை அவர் கண்டுக்கவே இல்லை. நண்பர்களும், குடும்பத்தாரும் பலமுறை சொல்லியும் அவர் செவி கொடுத்து கேட்கவில்லையாம்.
ஒருமுறை மயில் சாமிக்கு இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil