கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர் மயில்சாமி - ஆளுநர் தமிழிசை இரங்கல்

Smt Tamilisai Soundararajan Mayilsamy
By Irumporai Feb 19, 2023 04:16 AM GMT
Report

நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் தமிழிசை இரங்கல் அந்தவகையில் தெலங்கானா மற்றும் புதுச்சேர் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் , கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர் மயில்சாமி என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழிசை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

தமிழிசை இரங்கல்

நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர்.விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.

கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர் மயில்சாமி - ஆளுநர் தமிழிசை இரங்கல் | Mayilsamy Governor Tamilisai Who Praised

 மக்கள் மனதில் இடம்

மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களைதனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.