அஜித்தை நினைத்து உருகி பேசிய மயில்சாமி... - அஞ்சலி செலுத்த வராத அஜித்... - ரசிகர்கள் ஆதங்கம்...!
அஜித்தை நினைத்து உருகி பேசிய மயில்சாமியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உயிரிழப்பு
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. கடந்த சனிக்கிழமை சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்.
கோயிலுக்கு சென்றுவிட்டு மறுநாள் அதிகாலைக்கு இல்லம் திரும்பிய மயில்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினரும், ரசிகர்களும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அஜித்தை புகழ்ந்த பேசிய மயில்சாமி
மயில் சாமி இறப்பிற்கு பிறகு அவர் பேசிய பல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஒரு சமயம் அஜித்தை பற்றி மயில்சாமி உருகி பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்துடன் ‘வேதாளம்’, ‘வீரம்’ போன்ற சில படங்களில் மயில்சாமி சேர்ந்து நடித்துள்ளார். ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் அஜித்திடம் தான் கண்ட அந்த நல்ல விஷயம் என்ன என்பதை பற்றி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
நான் ஒரு நாள் படப்பிடிப்பில் அஜித்திடம், சார்.... எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவருக்கும் உங்களை பிடிக்கிறது என்றேன். ஆனால், அதற்கு அஜித் இதில் தனக்கு நம்பிக்கையே கிடையாது சார் என்றார். இது உண்மை சார்... உள்ள இருக்கிற உங்களுக்கு தெரியாது, வெளியில் இருந்து பார்க்கிற எனக்குத் தான் தெரியும். அத்தனை பேருக்குமா என்னை பிடிக்கிறது என்றார்.
இவர் சொல்லிய 2 மாதங்கள் கழித்து, நடிகர் சோ வும் இதே கருத்தை தான் என்னிடம் ஒரு பேட்டியில் கூறினார். ஒரு முறை சுவர் போஸ்டரிலும் ரசிகர்கள் ஒரு பக்கம்.. எம்ஜிஆர் புகைப்படம் இன்னொரு பக்கம்...
இரு புகைப்படங்களும் போஸ்டரில் விளம்பரம் பண்ணியிருந்தனர். இதை பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் சொன்னது அப்படியே நடக்கிறது என்று துள்ளி குதித்தேன்.
அஜித் எத்தனை பேருக்கு உதவிகளை செய்து வருகிறார்ன்னு தெரியுமா. ஆனால் அதையெல்லாம் இன்று வரை அவர் விளம்பரப்படுத்தவே இல்லை. நான்தான் செய்தேன் என்று அவர் சொன்னதே கிடையாது என்று அஜித்தை பற்றி உருகி மயில்சாமி பேசியுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள்.. இப்படி புகழ்ந்து பேசிய மயில் சாமி இறப்பிற்கு, அஞ்சலி செலுத்த அஜித் உட்பட பல முன்னனி நடிகர்கள் வராதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.