விவேக்கை கூப்பிட்டு போனேன்.. அடுத்து ரஜினிதான் : நிறைவேறாத மயில்சாமியின் ஆசை
பிரபல காமெடி நடிகரான மயில்சாமி இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவருடைய கடைசி ஆசை குறித்து ட்ரம்ஸ் சிவமணி பேசியுள்ளார்.
மயில் சாமி மரணம்
தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் உருகவைக்கும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் மயில்சாமி. மயில்சாமியின் கடைசி நிமிடங்கள் குறித்து அவருடன் இருந்த பிரபல இசைக் கலைஞர் ட்ரம்ஸ் சிவமணி கூறியுள்ளார்.
அதில் சிவராத்திரிகளில் பல கோவில்களுக்கும் சென்று கச்சேரி செய்வேன். இந்த மேகநாதேஸ்வரர் கோவிலுக்கு என்னை வர சொல்லி மயிலு போன் செய்து கொண்டே இருந்தார்.
ரஜினி வரணும்
பின்னர் அங்கு சென்று நான் வாசித்தேன். பிறகு நானும், மயிலும் ஓம்காரம் பாடினோம். தனது குடும்பத்தினரை வீட்டில் விட்டுவிட்டு திருவான்மியூர் கோவிலுக்கு வருவதாக சொன்னார்
மேலும் நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது “இந்த கோவிலுக்கு நான் விவேக் சாரை அழைச்சிட்டு வந்திருக்கேன். ஒரு தடவையாவது ரஜினி சாரை அழைச்சிட்டு வந்து அவர் கையால் லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வெச்சு பாக்கணும்னு ஆசை” என்று மயில்சாமி தனது ஆசையை தெரிவித்ததாகவும் ட்ரம்ஸ் சிவமணி கூறியுள்ளார்.

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
