மருத்துவர் வீட்டில் 11 பவுன் நகை, ரூ.2.75 லட்சம் ரொக்கம் கொள்ளை

theft Mayiladuthurai
By mohanelango May 12, 2021 08:55 AM GMT
Report

மயிலாடுதுறை அருகே ஹோமியோபதி மருத்துவர் வீட்டில் 11 பவுன் நகை, ரூ.2.75 லட்சம் ரொக்கம் கொள்ளை. மணல்மேடு போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட சின்னஇலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டில் வசிப்பவர் ரெங்கநாதன், ஹோமியோபதி மருத்துவராக உள்ளார்.

இவர் நேற்று தனது மனைவி இந்துமதியை அழைத்துக்கொண்டு மயிலாடுதுறையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு வந்துள்ளார்.

இரவு மூவலூரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கிவிட்டு இன்று காலை 9 மணிக்கு தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மணல்மேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.