மயிலாடுதுறையில் பரபரப்பு..கஞ்சா பதுக்கிய மாவட்ட செயலாளர் கைது !
மயிலாடுதுறை அருகே வீட்டில் கஞ்சா வைத்திருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனன் [36.]
இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் எஸ்பி ஸ்ரீ நாதா உத்தரவின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் விரைந்து சென்று மயில்வாகனன் வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது அங்கு ரூ 40,000 மதிப்புள்ள ஒன்றே கால் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மயில் வாகனனை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.