கனமழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் - இபிஎஸ் நேரில் ஆய்வு
கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் உண்டாகின. இதனை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, ஏற்கனவே சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களுக்கு மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.
அதனை தொடர்ந்து இன்று கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை இபிஎஸ் பார்வையிட்டார்.
சீர்காழி பகுதியில் இதுவரை பெய்யாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அதனால் வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருந்துள்ளது. அதனை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி.