முகக்கவசம் அணியாதவர்களின் காலில் விழுந்து முகக்கவசம் அணிய சொன்ன பேரூராட்சி ஊழியர்கள்..!
mayiladudurai
healthworkers
begpeople
wearmask
By Anupriyamkumaresan
மயிலாடுதுறை அருகே முகக்கவசம் அணியாதவர்களின் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்த மணல்மேடு பேரூராட்சி ஊழியர்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணல்மேடு பேரூராட்சியில் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனால் பேரூராட்சி சார்பில், தினந்தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முகக்கவசம் அணியாதவர்கள் காலில் விழுந்து பேரூராட்சி ஊழியர்கள், முகக்கவசம் வழங்கி தயவு செய்து அணியுங்கள் என வேண்டுகோள் விடுக்கும் வீடியோ காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்கிறது