இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விலகினார் முக்கிய இந்திய வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து இந்திய வீரர் மயங்க் அகர்வால் விலகியுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கிய காரணத்தினால் முதல் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.

ஏற்கெனவே தொடக்க வீரர் சுப்மன் கில் இங்கிலாந்து தொடரிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். தற்போது மயங்க் அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ள காயம் அணியில் மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்