ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்!
ஆர்சிபியில் இருந்து தேவ்தத் படிக்கல் காயம் அடைந்து விலகி இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தேவ்தத் படிக்கல் விலகல்
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி என்றாலும், இன்னும் ஒரு போட்டியில் வென்றால் டாப் 2 இடங்களில் நிறைவு செய்ய முடியும். இல்லையென்ரால் எலிமினேட்டர் சுற்றில் விளையாட வேண்டிய நிலை வரலாம்.
குறிப்பாக அணிக்கு வெற்றிகளுக்கு விராட் கோலி, தேவ்தத் படிக்கல், டிம் டேவிட் உள்ளிட்டோர் முக்கிய காரணமாக உள்ளனர். இந்நிலையில், இடது கை பேட்டரான தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
புலம்பும் ரசிகர்கள்
இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். கர்நாடக வீரரான இவர் 127 போட்டிகள் விளையாடி 2661 ரன்கள் எடுத்துள்ளார்.
இதில் ஒரு சதம் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும். இம்முறை ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
