பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் - கொண்டாடும் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு புது கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு தலா 5 அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் நடப்பாண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணியின் விளையாடி வரும் மயங்க் அகர்வால் அனுபவம் நிறைந்த வீரராக இருப்பார் என்பதால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.