குடிச்சதுனால வந்த பிரச்சனை - 48 மணி நேரம் பேச முடியாது...ஐ.சி.யூவில் மயங்க் அகர்வால்..!
பிரபல கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் உடல்நல பிரச்சனையால் ஐ.சி.யூ'வில் அனுமதிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மயங்க் அகர்வால்
இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறவில்லை என்றாலும், ரஞ்சி போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரபலமான கிரிக்கெட் வீரராக நீடிக்கிறார் மயங்க் அகர்வால்.
இது வரை இந்திய அணிக்காக 19 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால், டெஸ்ட் போட்டியில் 4 சதங்களும், 6 அரை சதங்களும் என 1429 ரன்களை குவித்துள்ளார். தற்போது ரஞ்சி போட்டியில் தீவிரம் காட்டி வரும் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.யூ...
போட்டிக்கு பிறகு, மீண்டும் பெங்களூரு திரும்ப அணியினருடன் விமானத்தில் பயணித்த போது, மயங்க் குடிநீர் வேண்டும் என கேட்க, வழங்கப்பட்ட குடிநீரை சிறிது அருந்தியவுடனே கடும் எரிச்சல் ஏற்பட, விமானத்தில் இருந்து உடனடியாக இறக்கபட்டுள்ளார்.
அகர்தலாவில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்து அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிய வந்துள்ளது. தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டால் காரணத்தால் அவர் 48 மணி நேரம் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.