மே 2 ம் தேதி சிறப்பான சம்பவம் இருக்கு : திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

election dmk stalin vote may
By Jon Apr 06, 2021 11:40 AM GMT
Report

முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணைய நடவடிக்கையில் திருப்தியும் இல்லை அதிருப்தியும் இல்லை என கூறினார்.

அதே சமயம் மக்கள் ஜனநாயக கடமையை ஆற்றிக்கொண்டிருப்பதாக கூறிய ஸ்டாலின்,வரும் மே 2-ம் தேதி சிறப்பாக இருக்கும் எனவும், தோல்வி பயத்தால் தேர்தலை ஒத்தி வைக்க ஆளும் கட்சி முயற்சி செய்வதாகவும்கூறினார். ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியிலும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.