தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம்.. தமிழக அரசு உத்தரவு

tamilnadu electricity
By Irumporai May 10, 2021 05:26 PM GMT
Report

கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.

இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மே 10 முதல் 24ம் தேதி வரை இருப்பின் மே 31ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.