மே-1 ஊரடங்கு அவசியமில்லை - தமிழக அரசு தகவல்
மே 1ம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ள இந்தநிலையில் மே 1-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மே 1-ம் தேதி விடுமுறை தினம் என்பதால் முழு ஊரடங்கிற்கு அவசியம் இல்லை என தெரிவித்துள்ள தமிழக அரசு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதால், அதனை தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், மே 2 முழு ஊரடங்கு அன்று வாக்கு எண்ணும் பணிகளில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை - வேட்பாளர்கள், முகவர்கள் சென்று வரலாம்; முகவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.