இரவு பார்ட்டி.. மருத்துவமனையில் மேக்ஸ்வெல் - ஆஸி. கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உத்தரவு!
ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் இரவு பார்ட்டிக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல், 'சிக்ஸ் அண்ட் அவுட்' என்ற இசை நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்துகொண்டார்.

அப்போது மது அருந்திவிட்டு இசையை ரசித்துக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சில மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கிரிக்கெட் வாரியம்
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறுகையில் "மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து தெரியும்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம். சமீபத்தில் அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பணிச்சுமையே காரணம். மற்றபடி தற்போதைய சம்பவத்துக்கும், நீக்கத்துக்கும் தொடர்பில்லை.
அவர் 20 ஓவர் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை' என்று தெரிவித்துள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil