மொரீஷியஸ் நாட்டுக்கு லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பியது இந்தியா

vaccine corona million
By Jon Jan 23, 2021 02:22 PM GMT
Report

இந்தியாவில் இருந்து 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மொரீஷியஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டன. இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் மொரீஷியஸ் நாட்டிற்கு விமானம் மூலம் 1 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. கரோனா தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை மொரீஷியஸ் சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக பூடான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு மத்திய அரசால் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.