பெங்களூரு - குஜராத் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் ... நடுவரின் தவறான தீர்ப்பால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வீரர் மேத்யூ வேட் அவுட்டானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 62, டேவிட் மில்லர் 34 ரன்களும் எடுத்தனர்.
Matthew Wade??#RCBvsGT #Wade #rcb pic.twitter.com/d49As0visw
— Vasudevan Ks❁ (@FOREVERVK_18) May 19, 2022
இதனையடுத்து, 169 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் பாப் டூபிளெசிஸ் 44, விராட் கோலி 73, மேக்ஸ்வெல் 44 ரன்களும் விளாச 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் குஜராத் அணி வீரர் மேத்யூ வேட் மேக்ஸ்வெல் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். எல்பிடபிள்யூ அப்பீல் கேட்கப்பட்ட போது சிறிது நேரம் யோசித்த அம்பயரும் அவுட் கொடுத்தார். இதை எதிர்த்து மேத்யூ வேட் DRS அப்பீல் செய்தார். அதில் பந்து பேட்டிற்கு மிக அருகில் சென்றது போல் இருந்தாலும் அல்ட்ரா எட்ஜ் முறையில் பெரிதாக காட்டாததால் அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை சற்றும் எதிர்பாராத மேத்யூ வேட் விரக்தியடைந்தார். கோபத்தில் டிரெஸ்சிங் ரூமிற்கு சென்று பேட் மற்றும் ஹெல்மெட்டினை வேகமாக தரையில் தூக்கி எறிந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.