அவரால் முடியும்.. தோனி ஆஸி. அணியின் கேப்டனாகலாம்? இதை கவனிச்சீங்களா!
எம்.எஸ்.தோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் மற்ற இந்திய வீரர்களை விட எம்.எஸ்.தோனிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகக் கூடிய தகுதி இருக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது "ஆஸ்திரேலிய உடை மாற்றும் அறையில் தோனி எளிதாக உட்கார்ந்து அதை கேப்டன்ஷிப் செய்ய முடியும்.
நட்சத்திர கேப்டன்
ஏனெனில் அவர் யாரையும் விட பெரியவர் அல்ல என்று நம்புகிறார் மற்றும் மிகவும் எளிமையானவர். தோனி அணியில் கடினமாக உழைக்கிறார். தன்னை அவர் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.
தான் என்ன சாதித்தேன் என்பதை தோனி மற்றவர்களிடம் சொல்வதை பார்த்திருக்க முடியாது. அனைத்து வீரர்களையும் ஒன்றிணைக்க தோனி ஒரு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளார். சுய விளம்பரத்திற்காக அல்லாமல் ஈகோவை பற்றி எதுவும் இல்லாத வகையில் அவர் அதை செய்கிறார்.
சிறிய கிராமத்திலிருந்து வந்த அவர் இந்திய மக்கள் குறிப்பாக சென்னை மக்களின் இதயங்களில் இடம் பிடிக்கும் வழியை கண்டறிந்துள்ளார். எப்போதும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர கேப்டனாக தல இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.