உனக்கு இவ்வளவு திமிரு இருக்க கூடாது... ராஜஸ்தான் வீரருக்கு மேத்யூ ஹைடன் எச்சரிக்கை
ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக்கிற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துவக்க வீரர் மேத்யூ ஹைடன் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த மே 15 ஆம் தேதி ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜாஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் இளம் வீரர் ரியான் பராக் செய்த செயலால் ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.19.2 ஓவரில் லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடித்த பந்தை பிடித்த ரியான் பராக் அதனை கொண்டாடும் வகையில் பந்தை தரையில் படுமாறு வைத்து அம்பயர்களின் முடிவை கேலி செய்யும் விதத்தில் நடந்து கொண்டார்.
இதனைக் கண்ட பலரும் அம்பயர்கள் தவறே செய்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் ரியான் பராக் செயலை கண்டித்துள்ளார்.
மேலும் அவர், கிரிக்கெட் என்பது நீண்ட கால விளையாட்டாகும். அதில் எங்களை போன்றவர்களுக்கு பல நினைவுகள் உள்ளது. ஒருபோதும் விதியை மாற்ற முடியாது. ஆனால் நினைவுகள் என்பது சீக்கிரம் வந்து விடும் என தெரிவித்துள்ளார்.