IT ஊழியர்கள் போன் பண்ணாதீங்க... வைரலாகும் மாப்பிள்ளை தேடும் விளம்பரம்!

Marriage Viral Photos
By Sumathi Sep 21, 2022 07:46 AM GMT
Report

திருமண வரன் தேடும் மேட்ரிமோனியில் வந்த ஒரு விளம்பரம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.

திருமண விளம்பரம்

செய்தித் தாளில் வெளியான திருமண விருப்பம் தொடர்பான ஒரு விளம்பரம் தற்போது வைரலாகி வருகிறது.

IT ஊழியர்கள் போன் பண்ணாதீங்க... வைரலாகும் மாப்பிள்ளை தேடும் விளம்பரம்! | Matrimonial Ad Asks Software Engineers To Not Call

அதில் 24 வயதான பணக்கார குடும்ப வணிக பின்னணியைச் சேர்ந்த அழகான எம்பிஏ பெண் ஒரு மணமகனைத் தேடும் செய்தித்தாள் விளம்பரம் ஒன்றில் அவர்களது எதிர்பார்புகளில் “இதே சாதியில் உள்ள ஐஏஎஸ்/ஐபிஎஸ், வேலை செய்யும் மருத்துவர் (பிஜி), தொழிலதிபர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று எழுதப்பட்டு இருந்தது".

ஐடி மாப்பிள்ளை வேண்டாம்!

அதிலும் குறிப்பாக “மென்பொருள் பொறியாளர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ள வேண்டாம்” என்று எழுதியிருந்தது. இந்த விளம்பரம்தான் தற்போது ட்விட்டரில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த விளம்பரத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் மும்பையை தளமாகக் கொண்ட நிதி ஆலோசனை நிறுவனமான ஹீலியோஸ் கேப்பிட்டலின் நிறுவனர் சமீர் அரோரா (@iamsamirarora) பகிர்ந்து கொண்டார்.

வைரல் ட்வீட்

இதுவரை அவரது ட்வீட் செப்டம்பர் 16 அன்று வெளியிடப்பட்டதிலிருந்து 4,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை சேகரித்துள்ளது. அவருடைய பதிவில், "ஐடி-யின் எதிர்காலம் அவ்வளவு அழகாகத் தெரியவில்லை," என்று அவர் எழுதியிருந்தார்.

இந்த பதிவில் பலர் தனது கருத்துகளையும், ஆதங்கத்தையும் தெரிவித்து வருகின்றனர்.