இலங்கை கிரிக்கெட்டில் இந்த வீரர் இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
இலங்கை கிரிக்கெட்டின் ஒப்பந்த பட்டியலில் மேத்யூஸ் பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட ஒப்பந்த பட்டியலுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.
அதில் வீரர்களின் பங்களிப்பு, உடற்தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, 2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும் உடற்தகுதிக்கு 20 சதவீதமும் தலைமைப்பண்பு உட்பட மற்றவைக்கு 10 சதவீதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை எனக்கூறி வீரர்கள் கையெழுத்திட மறுத்தனர்.
இதனையடுத்து வெளிப்படைத்தன்மையை உருவாக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் சுமார் 18 வீரர்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மேத்யூஸின் பெயர் இடம்பெறவில்லை.
இலங்கை அணிக்குத் தேர்வாக மேத்யூஸ் தயாராக இல்லாததால் ஒப்பந்தத்தில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.