மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கணித ஆசிரியர் பணியிடை நீக்கம்..!
நன்னிலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆசிரியரை பணியிடை நீக்கம் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆணைகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு கணித ஆசிரியராக பணிபுரியும் கார்த்திகைசாமி என்பவர் 8 க்கும் மேற்பட்ட மாணவிகளின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறாக நடந்து கொண்டுள்ளதாக தலைமை ஆசிரியர் குலசேகரனிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜனிடம் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் விசாரணையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் தியாகராஜன் ஆசிரியர் கார்த்திகைசாமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.