Friday, May 9, 2025

csk அணிக்கு தொடரும் சிக்கல் - முக்கிய பந்துவீச்சாளர் விளையாடுவதில் சந்தேகம்!

Chennai Super Kings IPL 2024
By Swetha a year ago
Report

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதிசா பதிரானா விளையாடுவதில் சந்தேகம் என தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அனைவரும் கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

csk அணிக்கு தொடரும் சிக்கல் - முக்கிய பந்துவீச்சாளர் விளையாடுவதில் சந்தேகம்! | Matheesha Pathirana Huge Injury Concern Csk

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதிசா பதிரானா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

அண்மையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற மதிசா பதிரானாவுக்கு இடது தொடை எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

5 ஆயிரம் கி.மீ கடந்து டேட்டிங்; காதலர் செய்த காரியம் - பெண் எடுத்த ஷாக் முடிவு!

5 ஆயிரம் கி.மீ கடந்து டேட்டிங்; காதலர் செய்த காரியம் - பெண் எடுத்த ஷாக் முடிவு!

என்ன காரணம்?

காயம் தீவிரமாக உள்ளதால் வரும் தொடரில் பதிரானா பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

csk அணிக்கு தொடரும் சிக்கல் - முக்கிய பந்துவீச்சாளர் விளையாடுவதில் சந்தேகம்! | Matheesha Pathirana Huge Injury Concern Csk

இது குறித்து பேசிய சென்னை தரப்பு, "காயம் குணமடைய இரண்டு வாரங்கள் தேவை என்பதால், பதிரானா தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு பங்கேற்பதில் சந்தேகம்தான்" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரும் முதல் ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், ஏற்கனவே காயத்தால் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே விலகிய நிலையில்,

பதிரானாவும் விளையாடுவதில் சிக்கல் எழுந்திருப்பது சென்னை அணியை பாதித்துள்ளது, இதையடுத்து, அவருக்கு பதிலாக யார் விளையாடுவர்கள் என்ற கேள்வியும் சென்னை அணியின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.