உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ல் தேதி மாற்றமா? ஐசிசி வெளியிட்ட முக்கிய தகவல்!
போட்டிகளின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டொபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உள்பட 9 போட்டிகளின் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
மாற்றப்பட்ட போட்டிகள்
அந்த வகையில் ' இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதிக்கு பதிலாக ஒருநாள் முன்னதாக 14-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 14-ம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தாமதமாக 15-ம் தேதி நடைபெறும்.
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் ஹைதராபாத்தில் அக்டோபர் 12-ம் தேதி மோத இருந்த ஆட்டம் இரு நாட்கள் முன்னதாக 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் அக்டோபர் 13-ம் தேதி மோத இருந்த ஆட்டம் ஒருநாள் முன்னதாக 12-ம் தேதி நடைபெறுகிறது. மேலும், நியூஸிலாந்து - வங்கதேசம் அணிகள் அக்டோபர் 14-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுவதாக இருந்தது.
இந்த ஆட்டம் காலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த போட்டி ஒருநாள் முன்னதாக 13-ம் தேதி பகலிரவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10-ம் தேதி இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டம் தரம்சாலாவில் பகலிரவாக நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லீக் சுற்றின் இறுதிப் பகுதியில் நவம்பர் 11-ம் தேதிஇரு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் நவம்பர்12-ம் தேதி புனேவில் மோதுவதாக இருந்தன.இந்த ஆட்டம் தற்போது ஒருநாள் முன்னதாக 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
இறுதியாக இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நவ.11-ம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தாமதமாக 12-ம் தேதி பகலிரவு ஆட்டமாக பெங்களூருவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
Updated fixtures have been revealed for #CWC23 ?
— ICC (@ICC) August 9, 2023
Details ? https://t.co/P8w6jZmVk5 pic.twitter.com/u5PIJuEvDl