இந்திய பேட்ஸ்மென்களுக்கு காத்திருக்கும் வேதனை - என்ன தெரியுமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணி தங்களுக்குள்ளேயே அணி பிரித்து டெஸ்ட் போட்டி போல் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இந்த முறை பந்துகள் வேகமாக வருவதோடு, பிட்ச் ஆகி நன்றாக எழும்புமாறு பிட்ச் அமைக்கப்படவுள்ளது.
பிட்ச் தயாரிப்பாளர் சைமன் லீ, வேகம்தான் போட்டிக்கு கூடுதல் விறுவிறுப்பைத் தரும் என்கிறார். ஆனாலும் பேட்டிங் திறமையுள்ளவர்கள் சிறப்பாக ஆட முடியும்.
இது குறித்து பிட்ச் தயாரிப்பாளர் சைமன் லீ பேசிய போது, ஏஜியஸ் பவுலில் உலக சாம்பியன்ஷிப் பைனல் நடப்பது அருமை. இதற்கான பிட்ச் அமைக்கும் பணி எனக்குக் கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். நான் பிட்சில் பந்துகள் வேகமாக, எழும்பி வருமாறு களம் அமைப்பேன். இங்கிலாந்தில் பொதுவாக இப்படிச் செய்ய முடியாது, ஏனெனில் வானிலை அப்படி, ஆனால் இந்த முறை வெயில் அடிப்பதால் நல்ல வேகப்பந்து வீச்சு ஆட்டக்களத்தை அமைக்கலாம்.
நான் ஒரு கிரிக்கெட் ரசிகன். எனவே அருமையான பேட்டிங், நல்ல பவுலிங் இரண்டுக்குமே வாய்ப்பளிக்கும் பிட்ச்தான் அமைப்பேன் என கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்தியா தொடரை வென்ற போது அடிலெய்டில் 36 ஆல் அவுட் ஆன பிறகு இந்திய அணி தொடரை வென்றாலும் பிட்சின் தரம் 80களில் 90களில் ஆஸ்திரேலிய பிட்ச் தரத்த்திற்கு இல்லாமல் இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்ததையும் கவனிக்க வேண்டும். மேலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பலவீனமடைந்ததற்கும் இதுவே காரணம் என தெரிவித்தார்.
மேலும், உண்மையான பிட்சில் ஆடி வெற்றி பெற்றால் அது தரும் சுகமே அலாதிதான். 2007-ல் திராவிட் தலைமையில் இந்தியா அங்கு வென்றது, அதே போல் 1986-ல் கபில் போய் 2-0 என்று இங்கிலாந்து அணிக்கு உதை கொடுத்தது, பிறகு கங்குலி தலைமையில் 1-1 என்று டிரா செய்ததெல்லாம் பெரிய சாதனைகள்தான் எனவும் கூறியுள்ளார்.