மக்களவையில் புகை குண்டு வீச்சு - மூளையாக செயல்பட்டவர் போலீசில் சரண்!
பாராளுமன்ற மக்களவையில் புகை குண்டு வீச்சு விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர் போலீசில் சரணடைந்துள்ளார்.
புகை குண்டு வீச்சு
பாராளுமன்ற மக்களவையில் நேற்றும் முன்தினம் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து திடீரென இரண்டு பேர் குதித்து மக்களவை நடைபெறும் இடத்திற்குள் வண்ண புகை குண்டுகளை வீசினர்.
அதே நேரத்தில் பாராளுமன்றத்திற்கு வெளியேவும் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .
போலீசில் சரண்
அதில், இதற்கு மூளையாக செயல்பட்டவர் லலித் ஷா கர்தாவ்யா என தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து லலித் ஷாவை சிறப்பு பிரிவினரிடம், டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்.
பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய அரசு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மக்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.