Sunday, May 11, 2025

எப்ப வந்தாலும் மாஸ்டர் மாஸ் தான்: முதல் நாள் வசூலில் பட்டையைக் கிளப்பிய மாஸ்டர் எவ்வளவு வசூல் தெரியுமா?

cinima boxoffice tamilnadu
By Jon 4 years ago
Report

மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளன. நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடினார்கள். படத்தை பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் படம் சென்னையில் மட்டும் ரூ.1.21 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதன் மூலம் எந்த சூழலிலும் தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை தளபதி நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.