பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய நடிகர் விஜய் சேதுபதி: எழுந்தது சர்ச்சை
இன்று பிறந்தநாளை கொண்டாடும் விஜய் சேதுபதி பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிறந்தநாளை கொண்டாடும் விஜய்சேதுபதிக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஜய் சேதுபதி, எனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது விவாதத்தை கிளப்பியுள்ளது, தற்போது பொன்ராம் சார் படத்தில் நடிக்க இருக்கிறேன்.
அந்த படத்தில் பட்டாக்கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும், எனவே தான் அந்த படக்குழுவினருடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடும் போது பட்டாக்கத்தியால் வெட்டினேன்.
இது ஒரு தவறான முன்னுதாரணம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர், இது யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கின்றேன்.
இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.