திரையரங்குகள் 100% திறப்பு: இணையத்தில் வலுக்கும் எதிர்ப்புகள்
நடிகர் விஜய் மற்றும் நடிகர் சிம்புவின் கோரிக்கைகளை ஏற்று திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் இயக்குவதற்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட புதிய படங்கள் வெளிவர உள்ள நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் பெரிதும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனா பரவல் முழுவதுமாக குறையாத நிலையில் இந்த அறிவிப்புக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பள்ளிக்கூடங்களே திறக்கப்படாத சூழலில் திரையரங்குகளை திறப்பதனால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் விஜய் மற்றும் நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர்களுடன் வந்து அமர்ந்து தியேட்டர்களில் படத்தைக் காண்பார்களா எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர்.