மாஸ் காட்டும் வீடியோவுடன் வெளியான மாஸ்டர் படத்தின் அப்டேட்

vijay master
By Jon Dec 29, 2020 05:42 PM GMT
Report

தளபதி விஜய் நடித்த "மாஸ்டர்" படம் குறித்து மாஸான விடியோவுடன் வெளியான அப்டேட் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி விஜய் அவரகள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தியேட்டர் வெளியீட்டுக்காக காத்திருக்கும் படம் தான் "மாஸ்டர்". படம் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா பிரச்சனைக் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் தள்ளிப்போனது. தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ள நிலையில்.

வருகிற பொங்கல் வெளியீடாக ஜனவரி 13ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அடுத்த அப்டேட்டுக்காக மாஸான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

அந்த டுவிட்டில் “ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்... தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்” பிரம்மாண்டமான ரிலீஸ் அப்டேட் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.