தன்னுடைய கதை தான் மாஸ்டர் படம்: திருந்தாத கதாசிரியர்
தளபதி அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ள படமான மாஸ்டர் படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர் தான் ரங்கதாஸ்.
கடந்த முன்பு படத்தின் காட்சிகளை பார்த்துவிட்டு தான் கதை எழுதிய 'நினைக்குமிடத்தில் நான்' என்ற படத்தில் வரவும் காட்சிகள் போலவே உள்ளதாகவும். இது குறித்து தான் சட்ட போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
படம் வெளியாக சில தினங்களே உள்ள நிலையில் படத்தை தடுக்கும் நோக்கில் சொந்தம் கொண்டடுவது சரியா ? என்ற கேள்விக்கு சங்கத்தின் மூலம் தற்போது வரை தனக்கு நீதி கிடைக்க வில்லை என்றும் சட்ட போராட்டம் நடத்த போவதாகவும் கே.ரங்கதாஸ் தெரிவித்தார் /
ஒரு கட்டத்தில் மாஸ்டர் படத்தின் கதை என்ன ? உங்கள் படம் என்ன கதை ? என்று செய்தியாளர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளால் நிலைகுலைந்து போன ரங்கதாஸ், ஒரு வேளை தனது கதை திருட்டு போயிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் , அது தான் மாஸ்டர் படத்தின் கதையா ? என்பது தனக்கு தெரியாது என்றும் படம் வந்த பிறகு வழக்கு தொடுப்பேன் என்று கூறி சமாளித்தார்
ரங்கதாஸ் ஏற்கனவே விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி தோல்வி கண்டவர் என்பது குறிப்பிடதக்கது.