மாஸ்டர் படம் பைட்டிங் கிளப் ஆங்கில படத்தின் காப்பியா?: விளக்கமளித்த லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படம் ஆங்கில படமான பைட்டிங் கிளப் படத்தின் காப்பி என பரவலாக பேசப்பட்டதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.
தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி தற்போது பொங்கல் வெளியீட்டுக்கு தயராக உள்ள படம் தான் "மாஸ்டர்". இந்த படத்தை மாநகரம், கைதி படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் தளபதி ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு நேர்காணலில் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் 'மாஸ்டர் படம் ஆங்கில படமான பைட்டிங் கிளப் படத்தின் காப்பி என பரவலாக பேசப்பட்டு வருவத்தைப்பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் தெரிவித்ததாவது,"நானும் பைட்டிங் கிளப் படத்தை பார்த்திருக்கிறேன் .
தற்போது மாஸ்டர் படத்தின் டீசரை பார்த்துவிட்டு இரண்டையும் அனைவரும் ஒப்பிட்டு பேசி வருவதையும் அறிந்தேன். ஆனால் மாஸ்டர் படத்திற்கும் பைட்டிங் கிளப் படத்திற்கும் துளியும் சம்மந்தம் இல்லை. இந்த திரைப்படம் தளபதி விஜய் அவர்களை வேற கோணத்தில் வெளிக்காட்டும்"என அவர் தெரிவித்தார்.