ஓபிஎஸ் போட்ட மாஸ்டர் ப்ளான் வெற்றி - கடும் கோபத்தில் ஈபிஎஸ்
ஈபிஎஸ்-ஐ பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்த கொண்டாடி வருகின்றனர்.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில மாதங்களாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இதையடுத்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவித்தார்.
அதே போன்று அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி சண்முகம், உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் ஒருவரை ஒருவர் ஆதரவாளர்களை நீக்கி வருவதாக அறிவித்து வந்தது கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பிரதமரை சந்தித்த ஈபிஎஸ் - ஓபிஎஸ்
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து வரவேற்றார்.ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
பின்னர் டெல்லி புறப்பட்ட பிரதமரை நேரில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அவரை வழியனுப்பி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தர்மத்தின் வாழ்வுதன்னை சூடு கவ்வும் மீண்டும் தர்மமே மீண்டும் வெல்லும் என்று தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு
பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்-ஐ ஒதுக்கிய நிலையில் அவர் நீதிமன்றத்தை மட்டுமே நம்பி இருந்தார். இதனிடையே கடந்த மாதம் ஜுலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்தை ஈபிஎஸ் தரப்பு கூட்டியது.
இந்த கூட்டத்திற்கு தன்னிடம் ஒப்புதல் வாங்கவில்லை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.

அப்போது அவர் உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து உத்தரவு வழங்க ஆணையிட்டது.
மீண்டும் வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வந்தது.ஆனால் ஓபிஎஸ் தரப்பு நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.
ஓபிஎஸ்-க்கு ஆதராக வந்த தீர்ப்பு
இந்த வழக்கினை கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விசாரித்து வந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி ஜெயசந்திரன். அவரின் அளித்த தீர்ப்பில் அதிமுகவில் ஜுன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்டத்தை கூட்ட வேண்டும் ஈபிஎஸ்-ஐ பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு தனி கூட்டம் கூட்டக் கூடாது பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவால் நீதிமன்றத்தை நம்பி இருந்த அவருக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பின்னடைவு ஏற்படவில்லை
அதே வேளையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கே.பி.முனுசாமி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழுமையாக கிடைக்கவில்லை. எம்ஜிஆர்,ஜெயலலிதா நடத்தியது போன்றே பொதுக்குழு கூட்டப்பட்டது.
இந்த தீர்ப்பினால் பின்னடைவு ஏற்படவில்லை.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.