மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்டிவி-யில் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட ஷோவான ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியை வெளித்திரையின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, சர்வதேச செஃப்களான ஆர்த்தி சம்பத், ஹரீஷ் ராவ், கௌசிக் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பெரிய ஹிட்டான சமையல் ஷோ-வான இது முதன்முறையாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமையல் பிரியர்களுக்கு மாஸ்டர் செஃப் ஷோ மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

விஜய் சேதுபதிக்கு 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக தரப்படுகிறதாம்.

இந்நிகழ்ச்சியை தவிர, சன் டிவியுடன் 15 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி. அதோடு அவர் நடித்த 'லாபம்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்களின் உரிமையையும் சன் டிவி பெற்றிருக்கிறதாம்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்