எரிபொருள் செலவை குறைக்க எடுத்த முயற்சியால் விபரீதம் : இருளில் மூழ்கிய பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் மின் தடை
பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் நாடு முழுவதும் இன்று திடீர் மின் தடை ஏற்பட்டது , இதற்கு காரணம் என்னவென்றால் பாகிஸ்தான் அரசு எரிப்பொருளை மிச்சப்படுத்தும் வகையில் சில பகுதிகளில் இரவு நேரத்தில் மின் துண்டிப்பு செய்தனர்.

பொதுமக்கள் அவதி
இன்று காலை அந்த பகுதிகளுக்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்க முயன்ற போது , மின் விநியோகத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் , பாகிஸ்தானின் பல நகரங்களில் குடிநீர் விநியோகம் உள்பட அத்தியாவசிய சேவைகள் தடைபட்டது, தற்போது மின்சார சேவையினை கொடுக்க பாகிஸ்தான் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது.