சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த படுகொலை - போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 19 ஆம் தேதி பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெட்டி படுகொலை
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி வயது 35. இவர் சென்னை மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி வழக்கம் போல் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் ராஜேஸ்வரி வியாபாரம் செய்து வந்துள்ளார்.
மின்சார ரயில் இரவு 8 மணிக்கு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற போது ரயிலில் வந்து இறங்கியுள்ளார் ராஜேஸ்வரி.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.
5 பேர் கைது
பின்னர் ரயிலில் ஏறி தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜேஸ்வரியை மீட்டு சிசிசைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் தப்பியோடிய மர்ப நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இளைஞருடன் தகாத உறவு
கைது செய்யப்பட்ட நாகவள்ளி, ஜெகதீசன்,சூர்யா, ஜான்சன், சக்திவேல் ஆகியோரை போலீசார் விசாரித்ததில் நாகவள்ளி இளைஞர் சக்திவேலுடன் தகாத உறவில் இருந்து வந்ததை அவரது சகோதரி ராஜேஸ்வரி கண்டித்து வந்ததால் ஆள் வைத்து படுகொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட போது அக்கா ராஜேஸ்வரியின் உடலை பார்த்து கதறி அழுது புலம்பியுள்ளார் தங்கை நாகவள்ளி, மேலும் உடல் எடுத்துச் செல்லும் போது நடந்த ஊர்வலத்தில் குத்தாட்டமும் போட்டுள்ளார். இதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கி கொண்டார்.
தகாத உறவுக்காக உடன் பிறந்த சகோதரியை ஆள் வைத்து படு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல் IBC Tamil
