குரங்கு அம்மை நோயை தடுக்க மாஸ்க் கட்டாயம் - மத்திய அரசு அறிவுறுத்தல்..!

Government Of India Monkeypox ‎Monkeypox virus
By Thahir Aug 03, 2022 07:08 AM GMT
Report

குரங்கு அம்மை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமீபத்தில் தான் கொரோனா என்ற பெரும் தொற்று பரவி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. தற்போது புது வரவாக குரங்கம்மை நோய் தொற்று பரவி வருகிறது.

குரங்கு அம்மை நோயை தடுக்க மாஸ்க் கட்டாயம் - மத்திய அரசு அறிவுறுத்தல்..! | Masks Are Mandatory To Prevent Monkey Measles

இந்தியாவில் ஏற்கனவே குரங்கம்மை நோயால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் தொற்றில் இருந்து காத்துக்குள்ள எது செய்ய வேண்டும்? எது செய்யக்கூடாது என வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

செய்யவேண்டியவை:

→ குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நபர் முதலில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்.

→ அந்த நபர் முகக்கவசம் மற்றும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும்.

→ மேலும் அவ்வப்போது சோப்பு அல்லது சானிடைஸர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

செய்யக்கூடாதவை:

→ பாதிக்கப்பட்ட நபர் தங்களின் துண்டு,படுக்கை,பெட்ஷீட் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிரக்கூடாது.

→ பாதிக்கப்பட்டவரின் உடமைகளான துண்டு,படுக்கை,பெட்ஷீட் போன்றவற்றை மற்றவர்களின் துணிகளோடு சேர்த்து துவைக்க கூடாது.

→ மேலும் மிக முக்கியமாக அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது . 

இவ்வாறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போலவே இந்த கட்டுப்பாடுகளும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.