மீண்டும் முதல்ல இருந்தா? கோயம்பேடு சந்தையில் மீண்டும் கட்டுப்பாடு
கோயம்பேடு சந்தையில் தனி மனித இடைவெளியுடன் முக கவசம் கட்டாயம் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உருமாறிய புதிய வகை பிஎப் 7 கொரோனா
சீனாவில் உருமாறிய பிஎப்7 வகை கொரோனா தொற்று கடுமையாக பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கட்டாய முககவசம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தனிமனித இடைவெளி மற்றும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தைக்கு தினம்தோறும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து செல்வதால் கட்டாய முககவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.