தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மக்கள் பயப்பட வேண்டிய அசவியமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாஸ்க் கட்டாயம்?
சென்னையில் கொரோனா தடுப்பு ஒத்திகைக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் மாதிரி பயிற்சி நடைபெற உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை.

புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை. தனித்தனியாகவே கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை இல்லை. கொரோனா அதிகமானால், மாஸ்க் அணிவது குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.